பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைப்பு 500 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது
தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருந்தது. இதனால் தமிழகத்தின் கடலோர
மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து நேற்று தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டிய நிலையில் சென்னையில் நேற்று காலை மழை நின்றது. லேசாக வெயிலும் எட்டிப் பார்த்தது. இதனால் சென்னை மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். மாலையில் இருந்து மழை பெய்யும் என்று அறிவித்ததால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் இருந்தனர்.
மாலையில் லேசாக மழை தூறிய நிலையில் இரவில் மழை வலுக்க
பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரி உடைந்ததால் நீர் பெருக்கடுத்து ஓடியது. வெள்ள நீர் சுமார் 500 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
புரசைவாக்கம், ஓட்டேரி மற்றும் வடசென்னை பகுதிகளில் சாலைகளில் மீண்டும் வெள்ளம் ஓடியது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தென் சென்னை மற்றும் தாம்பரம், முடிச்சூர் பகுதியில் மீண்டும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெருங்களத்தூர், பொழிச்சலூர் போன்ற பகுதிகளிலும் தெருக்களில் மழை வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது.