குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு பால் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :
பால் – 5 கப்
சர்க்கரை – 1 கப்
கெட்டியான தேங்காய் பால் – 2 கப்
ஏலக்காய் பொடி – அரை டீஸ்பூன்
கொழுக்கட்டைக்கு…
கேழ்வரகு மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
பால் – அரை கப்
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
தண்ணீர் – 1/2 கப்
செய்முறை :
முதலில் ஒரு பௌலில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, உப்பு, தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை நீர் போன்று கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் அதை ஊற்றி, ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி, நெய் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டைகளாக (கோலிகுண்டு அளவில்) உருட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் பால் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்கும் போது அதில் கேழ்வரகு உருண்டைகளை சேர்த்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
கடைசியாக அதில் தேங்காய் பால், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி, 20 நிமிடம் கழித்து பரிமாற வேண்டும்.
சூப்பரான கேழ்வரகு பால் கொழுக்கட்டை ரெடி.