சீனாவில் டாக்டர் தேர்வில் மனிதர்களை தோற்கடித்து அதிக மதிப்பெண் பெற்ற ரோபோ
சீனாவில் டாக்டர் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரோபோ சாதனை படைத்துள்ளது.சீனாவின் தொழிநுட்ப நிறுவனம் இபிளைடெக் மற்றும் சிங்குவா பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த ரோபோ, டாக்டர் தகுதி தேர்வில் 456 மதிப்பெண்களை பெற்றது. இத் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 360 ஆகும்.சீனாவில் இந்தாண்டு 5.30 லட்சம் பேர் இத் தேர்வை எழுதினர். இதில் ரோபோவும் தேர்வு எழுதியது.மனிதர்கள் போன்றே வழங்கப்பட்ட நேரத்தில் ரோபோவும் தேர்வில் பதிலளித்தது.இன்டர்நெட் வசதி மற்றும் சமிக்ஞை வசதியில் தொடர்பில் இல்லாமல் ரோபோ தேர்வை எழுதியது.இதில் எந்த ஒரு மோசடியும் நேரிடவில்லை எனவும் விளக்கம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரோபோ தன்னிச்சையாக படிப்பதிலும், பிரச்னையை தீர்ப்பதிலும் தேர்ந்து உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும்காலங்களில் மருத்துவமனைகள்
மற்றும் வீடுகளில் மருத்துவர்களுக்கு உதவியாக இந்த ரோபோ பயன்படுத்தப்படும் என் அதிகாரிகள் தெரிவித்தனர்.