நான் ஒன்றும் ரோபோ இல்லை எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது வீராட் கோலி சொல்கிறார்
இந்திய அணியின் கேப்டன் வீர்ராட் கோலி இந்த வருடம் மட்டும் 7 டெஸ்ட், 26 ஒருநாள் மற்றும் 10 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். வீராட்கோலி இந்திய பிரிமீயர் லீக் 10-வது சீசனில் 10 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
இந்திய அணி இலங்கையுடன் கொல்கத்தாவில் ஈடன் கார்டனில் நாளை தொடங்கி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இது குறித்து வீராட் கோலி கூறும் போது நான் ஒன்று ரோபோ இல்லை எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது என கூறினார்.
இது குறித்து வீராட் கோலி கூறியதாவது:-
பணிச்சுமை பற்றி பேசுவதற்கு கடினமாக உள்ளது. வீரர்கள் ஓய்வெடுக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றிய நிறைய பேச்சு உள்ளது.
ஓய்வு ஏன் கேட்கிறார்கள் என மக்கள் வெளியில் இருந்து கேட்பது தெரிகிறது. எல்லோரும் ஒரே எண்ணிக்கையில் விளையாடுவார்கள்.
ஆனால் நீங்கள் விளையாடுகிற ஒவ்வொரு போட்டியிலும் அனைவருக்கும் ஒரேவிதமான பணிச்சுமை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்
இப்போது 20-25 வீரர்கள் போன்ற ஒரு வலுவான அணியை நாங்கள் கொண்டுள்ளோம் , முக்கியமான வீரர்கள் முக்கிய நேரங்களில் இறக்கபட வேண்டும் . அந்த சமநிலை பராமரிக்கப்பட வேண்டும்.
இது மூன்று வடிவங்களில் விளையாடுபவருக்கு ஒருவிதமான தீவிரத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள இயலாது. நிச்சயமாக, எனக்கு ஓய்வு தேவை. என் உடல் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைக்கும்போது, நான் அதை கேட்கிறேன். நான் ரோபாஇல்லை, நான் இரத்தம் சதை தோல் உள்ள ஒரு மனிதன்.
ஷிகர் தவான் மற்றும் கேல் ராகுல் ஆகியோர் நன்றாக விளையாடி வருகின்றனர். மூமூன்று பேரில் இரண்டு பேரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்., “