தூத்துக்குடி: பைக்கில் லிப்ட் கேட்டுச் சென்று தாக்கி பணம் மற்றும் செல்போன் வழிப்பறி- 4 பேர் கைது, பணம் மற்றும் செல்போன் பறிமுதல்- தனிப்படை போலீசார் அதிரடி

தூத்துக்குடி: பைக்கில் லிப்ட் கேட்டுச் சென்று தாக்கி பணம் மற்றும் செல்போன் வழிப்பறி- 4 பேர் கைது, பணம் மற்றும் செல்போன் பறிமுதல்- தனிப்படை போலீசார் அதிரடி

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த அந்தோணி மைக்கேல் மகன் அந்தோணி ரிக்சன் (21). என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தவரிடம் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளனர். பைக்கை நிறுத்தி அந்த நபரை ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது மறைவான இடம் வந்தபோது அங்கு இருவர் நின்றுகொண்டு இருந்துள்ளனர். திடீரென தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூபாய் 74 ஆயிரம் ரூபாயை அபகரித்து விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் மத்தியக்சன் அளித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திர இ.கா.ப மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல் குமார் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்சமகலிங்கம், பா. நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

தனிப்படை போலீசார் விசாரணையில், தூத்துக்குடி 3சென்ட் , அந்தோணியார் புரம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் மகாராஜா (வயது 23), சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் மகன் சஞ்சய் (வயது 20) மற்றும் சுந்தரவேல்புரம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மதியழகன் மகன் முத்து செல்வம் என்ற அகோர முத்து மற்றும் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சேர்ம ஜெகன் (17) ) சிறார் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

வழிப்பறி செய்து விட்டு குமரன் நகர் பகுதியில் பதுங்கி இருந்த அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் 74 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுத்தொடர்பாக வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )