
தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்குள் காவலாளியை தாக்கிய வடமாநில நபர் – பரபரப்பு
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த இரவு நேரக் காவலாளியை வடமாநில நபர் ஒருவர் கம்பால் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடிபழைய பேருந்து நிலையத்தில் நேற்றிரவு மாநகராட்சி செக்யூரிட்டியை ஜெயக்குமார் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபர் ஒருவர் அவரை கம்பால் சராமாரியாகத் தாக்கினார். மதுபோதையில் இருந்த அவர் காவலாளியை விரட்டி ஓட ஓட தாக்கியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த சிலர் அவரை தடுக்க முயன்றபோது அவர்களையும் தாக்க முயன்றுள்ளார். தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் காவலாளியை வட மாநில ஆசாமி தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.