தூத்துக்குடியில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர் காங்கிரஸார் கைது

தூத்துக்குடியில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர் காங்கிரஸார் கைது

தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி கடற்கரை சாலையில் துறைமுக சேர்மன் குடியிருப்பு முன்பு அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில், மத்திய அரசு இலங்கை அரசால் 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மேலும், இலங்கை பல மாதங்களாக வாடும் 5 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் வெளியுறவுத்
துறை அமைச்சகத்தை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட அகில இந்திய மீனவர் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஜோர்தான் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர், ATS அருள் முன்னாள் மாவட்ட தலைவர், கொட்டிவாக்கம் ரவி, அருள் ரிச்சர்ட், பாஸ்டின் ஜவகர், ஜேம்ஸ் வர்மா, பீட்டர், மைக்கேல், ஹசன் பீட்டர், பூபாலராயன், அருள்ராஜ், ரகு, பிரதீப் குமார், தினேஷ் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். .

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )