தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1400 கிலோ பீடி இலைகள் மற்றும் பைக் பறிமுதல் – கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்தல் நடைபெறுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜயஅனிதா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர் இருதயராஜ், ராமர், காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் இன்று 29/02/24 அதிகாலை ரோந்து பணியில் ஈடுபடனர். அப்போது தருவைக்குளம் மீன்பிடி கிராமத்திற்கு தெற்கே உள்ள வெள்ளைப்பட்டி செல்லும் கடற்கரையில் அதிகாலை 03.30 மணியளவில் லாரி மூலமாக பைபர் படகுக்கு மூட்டைகளை ஒரு கும்பல் ஏற்றியுள்ளது. இதைக்கண்ட கியூ பிரிவு போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்த கடத்தல் கும்பல் லாரி மற்றும் படகுடன் தப்பிச் சென்றது. பின்னர் போலீசார் அவர்கள் விட்டு சென்ற மூட்டைகளை சோதனை செய்தபோது இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த சுமார் 35 கிலோ எடை கொண்ட 44 பண்டல்கள் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட TN 69 BR 7601 என்ற பதிவு எண் கொண்ட Avenger பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பீடி இலை பண்டல்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுத்தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் எடை சுமார் 1400 கிலோ இதன் மதிப்பு 20 லட்சம் ஆகும்.