5-வது நாளை எட்டியது லாரிகள் வேலைநிறுத்தம்: ரூ.30 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம்
நாடு முழுவதும் லாரி உரிமையாளர் களின் வேலைநிறுத்த போராட்டம் 5-வது நாளை எட்டியது. இத னால் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந் துள்ளன. இதனால் ரயில்கள் மூலம் சரக்குகளை அனுப்புவது அதிகரித்துள்ளது. இதனிடையே போராட்டத்தை மேலும் தீவிரப் படுத்தும் வகையில் 3 சங்கங்களிடம் ஆதரவு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங் கிரஸ் கடந்த 4 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் தமிழகத்தில் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டன. இதேபோல், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவேண்டிய லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள் ளதால், சரக்கு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அரிசி, பருப்பு வகைகள், உணவு பொருட்கள், சிமெண்ட், மணல், பைப்புகள், பிளாஸ்டிக் பொருட்கள், மருந்து, உரம் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.
சரக்கு லாரிகள் மூலம் கோயம் பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய வெங்காயம், உருளைக்கிழக்கு போன்ற காய்கறிகள் வருவதில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.யுவராஜ் கூறியதாவது: ஏற் கெனவே, 2 முறை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போது, கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக அரசு கூறியது. ஆனால், எங்க ளது கோரிக்கைகளை ஏற்க வில்லை. எங்களது 3 கோரிக்கை களில் ஒரு கோரிக்கையாவது நிறை வேற்றி மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தில் இருந்து வாபஸ் பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே சென்னை பெட்ரோலியம் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் கே.வேல் கூறும்போது, ‘‘ 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வால் நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, எங்கள் சங்கத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் 24ம் தேதி (இன்று) மாலையில் நடக்கவுள் ளது. எனவே, நிர்வாகிகளுடன் கூடி ஆலோசித்து முடிவை அறிவிப்போம்’’ என்றார்.
தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்ட்டுகள் சம்மேளன மாநில தலைவர் ராஜ வடிவேலு கூறும் போது, “கடந்த 4 நாட்களில் ரூ.30 ஆயிரம் கோடி சரக்கு கள் தேக்கமடைந்துள்ளது. லாரி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள சுமார் 60 லட்சம் பேர் வேலை இல்லா மல் தவிக்கின்றனர்”என்றார்.
இதனிடையே, தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ரயில்கள் மூலமாக சரக்குகளை அனுப்புவது அதிகரித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 6,547 குவிண்டால் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம், தருமபுரி மாவட்டம் காவிரிபட்டணம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கு கின்றன. 4 லட்சம் தொழிலாளர் கள் நேரடியாகவும் 2 லட் சம் தொழிலாளர்கள் மறைமுகமாக வும் வேலைவாய்ப்பு பெறுகின்ற னர். வடமாநிலங்களில் மழை வெள் ளம் மற்றும் லாரி உரிமையாளர் கள் வேலைநிறுத்தம் உள் ளிட்ட காரணங்களால் தற்போது சுமார் ரூ.100 கோடி தீப்பெட்டி பண்டல்கள் தேங்கியுள்ளன.