இந்திய தேசிய கொடி நிறத்தில் கால் மிதியடி விற்பனை அமேசான் நிறுவனத்துக்கு சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை
மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு, அதுல் பாபோ என்பவர் அனுப்பிய டுவிட்டர் செய்தியில், ‘‘கனடாவில் உள்ள அமேசான் நிறுவனம் இந்திய தேசிய கொடி நிறத்தில் கால் மிதியடி விற்பனை செய்து வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது பற்றி அறிந்த சுஷ்மா சுவராஜ் அமேசான் நிறுவனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த நிறுவனம் இந்திய தேசிய கொடி நிறத்தில் உள்ள கால் மிதியடிகள் அனைத்தையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும். எந்த வித நிபந்தனையும் இன்றி அந்நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அமேசான் நிறுவனத்தினர் யாருக்கும் இந்திய விசா இனி கிடைக்காது. ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட விசா அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரம் குறித்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுஷ்மா அறிவுறுத்தி உள்ளார்.
நன்றி : தினத்தந்தி