
தூத்துக்குடியில் போலீஸார் கண்ணில் மிளகாய் பொடி தூவி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்
தூத்துக்குடியில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய
கைதி போலீஸ் காவலில் இருக்கும் போது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து தப்பியோட்டம் : காவலுக்கு வந்த பெண் போலீஸ் உட்பட இரண்டு போலீசாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 20.02.2024 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் முதல் வேம்பார் ரோடு பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு ஒருவரிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் ஹைகோர்ட் மகாராஜா (30) என்பவரை விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவரை கடந்த மார்ச் 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மற்றொரு வழக்கு விசாரணைக்காக இவரை இன்று விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைப்பதற்காக போலீசார் விளாத்திகுளத்தில் இருந்து ஒரு பெண் காவலர் ஒரு ஆண் காவலர் என இரண்டு காவலர்கள் பாதுகாப்புடன் அரசு பேருந்தில் ஏற்றுக்கொண்டு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்துள்ளனர். அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் சென்று பேரூரணி சிறைக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தபோது, திடீரென போலீசாரின் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவி உள்ளார். இதில் நிலை தடுமாறிய போலீசார், சுதாரித்து கொள்வதற்கு கைதி ஐகோர்ட் மகாராஜா அங்கிருந்து தப்பியோடி உள்ளார். அப்போது பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகனத்தில் மற்றொருவர் காத்திருக்க அந்த பைக்கில் ஏறி அந்த நபருடன் ஐகோர்ட் மஹாராஜா தப்பித்துச் சென்றார்.
தகவலறிந்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீஸார், தப்பியோடிய கைதியையும், தப்பிக்க உதவிய மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர். மேலும், பணியில் கவனம் இல்லாமல் இருந்த பெண் காவலர் மற்றும் ஆண் காவலரை போலீசார் விசாரித்து வருகின்றனர்
இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.