எச்சரிக்கை விடுக்காமல் அணைகளை திறந்ததே பேரழிவுக்கு காரணம்: எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றச்சாட்டு Pu
முன்னெச்சரிக்கை ஏதும் விடுக் கப்படாமல், கேரளாவில் அணை கள் திறந்துவிடப்பட்டதே பேரழி வுக்கு காரணம் என்று அம் மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் கடந்த 8-ம் தேதியிலிருந்து இரண்டு வாரங் களுக்கும் மேலாக மிக பலத்த மழை பெய்தது. வரலாறு காணாத மழையின் காரணமாக, மாநிலத் தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பிய தால் அவற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டன. இதனால், மாநிலத்தின் பல இடங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இவ்வாறு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 368 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனிடையே, மழைப்பொழிவு குறைந்து வெள்ள நீர் வடிந்து வருவதால், தற்போது அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டதற்கு மாநில அரசே காரணம் என காங்கிரஸ், பாஜக ஆகிய எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதுகுறித்து, கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கேரளாவில் வெள்ளம் ஏற் பட்டு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது வெறும் இயற்கை பேரிடரால் நிகழ்ந்தது கிடையாது. இது, முழுக்க முழுக்க மனிதர்களால் ஏற்படுத் தப்பட்ட பேரிடர் ஆகும். கேரளா வில் 44 அணைகள் திறந்து விடப்பட்டபோது, அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித மான முன்னெச்சரிக்கையை யும் அரசு விடுக்கவில்லை. மாறாக, நள்ளிரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த சமயம் பார்த்து, அணைகளை அரசு திறந்துவிட்டிருக்கிறது. எனவே, இந்த விவகாரம் தொடர் பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என ரமேஷ் சென்னி தாலா தெரிவித்தார்.
இதனிடையே, இதே குற்றச் சாட்டினை கேரள பாஜக தலைவர் பி.எஸ்.தரன் பிள்ளையும் தெரிவித்திருக்கிறார்