
3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பாலம் உடனடியாக சரி செய்ய வேண்டும் – கலெக்டருக்கு கோரிக்கை
தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 17.12.2023ந்தேதி பெய்த கனமழையின் காரணமாக கோரம்பள்ளம் அருகேயுள்ள அந்தோணியார்புரம் பாலம் உடைப்பு ஏற்பட்டது. அதன்பிறகு தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடர்ந்தது. இந்நிலையில், 3 மாதங்களை கடந்தும் இதுவரை அந்த பாலம் சரி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பாலத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதையில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும், இந்த சாலை ஒன்று தான் தூத்துக்குடி- திருநெல்வேலியை இணைக்கின்ற பிரதான சாலையாகும். இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருவதால், அவசர நிலை கருதி விரைவாக உடனடியாக சரி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES மாவட்டம்

