கொலை வழக்கில் 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது -கலெக்டர் மற்றும் எஸ்பி நடவடிக்கை

கொலை வழக்கில் 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது -கலெக்டர் மற்றும் எஸ்பி நடவடிக்கை

கடந்த 07.02.2024 அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு கோவங்காடு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் பால்துரை (34) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் கோவங்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மந்திரம் (எ) சின்னத்துரை (40),  தெற்கு கோவங்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ராஜேஷ் (எ) ராஜேஷ்குமார் (24) ஆகியோரை சாயர்புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.  இவ்வழக்கின் எதிரிகளான மந்திரம் (எ) சின்னத்துரை மற்றும் ராஜேஷ் (எ) ராஜேஷ்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சாயர்புரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ஜானகி அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கோவங்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் 1) மந்திரம் (எ) சின்னத்துரை,  தெற்கு கோவங்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் 2) ராஜேஷ் (எ) ராஜேஷ்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜானகி மேற்படி எதிரி மந்திரம் (எ) சின்னத்துரையை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், எதிரி ராஜேஷ் (எ) ராஜேஷ்குமாரை பேரூரணி மாவட்ட சிறையிலும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து அடைத்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (3 )