தூத்துக்குடியில் வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நடைப்பயணம் – முதல் தலைமுறை வாக்காளர் கொடியசைத்து தொங்கி வைத்தார்

தூத்துக்குடியில் வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நடைப்பயணம் – முதல் தலைமுறை வாக்காளர் கொடியசைத்து தொங்கி வைத்தார்

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024யை முன்னிட்டு வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்தும், 100 சதவிகிதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையிலும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திலிருந்து இன்று (09.03.2024) நடைபெற்ற சிறப்பு வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்துதலின்படி, காமராஜ் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உடற்கல்விப் படிப்பு பயின்று வரும் முதல் தலைமுறை வாக்காளர் மாணவி மாரியம்மாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024-ன் போது வாக்குபதிவின் முக்கியத்துவம் மற்றும் 100% வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையில் வாக்காளர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக Jukesmas SVEEP (Systematic Voters Education and Electoral Participation) எனப்படும் சிறப்பு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் சிறப்பு நடைபயணம் (Walkathon) மூலம் பொதுமக்கள் / மாணவர்கள்/ முதல் முறை வாக்காளர்கள்/ வாக்காளர்களிடையே வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி மாநில அலுவலர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் / மாணவர்கள்/ முதல் முறை வாக்காளர்கள்/ வாக்காளர்களிடையே வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் சிறப்பு வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இவ்விழிப்புணர்வு நடைபயணமானது தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பீச்ரோடு பகுதியில் அமைந்துள்ள சார்ஆட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. மேலும் வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரா.ஐஸ்வர்யா, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு அவர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், துணை ஆட்சியர்(தேர்தல்) ராஜகுரு, தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன், தேர்தல் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )