
தூத்துக்குடியில் மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 1934ம் ஆண்டு முதல் நீண்ட காலமாக தூத்துக்குடியில் இயங்கி வரும் பாரம்பரியமிக்க மகளிர் சமூக நல அமைப்பின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், மகளிர் சமூக நல அமைப்பின் புரவலருமான கீதாஜீவன் பெண்ணுரிமை மற்றும் மகளிர் பாதுகாப்பு குறித்தும், மற்றும் 181, 1098 ஆகிய அரசு உதவி எண்களை பெண்கள் தங்கள் உதவிக்காக எந்நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர் சொர்ணலதா பெண்கள் முன்னேற்றம் குறித்து உரையாற்றினார்.
1934ம் ஆண்டில் தி லேடிஸ் ாிகிாியேஷன் கிளப் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு சமீப காலங்களாக உமன் வெல்பர் ஆர்கனேஷன்ஸ் ஆக செயல்பட்டு வருகிறது. நீண்டகால பாரம்பரியம் கொண்ட இந்த மகளிர் சமூக நல அமைப்பில் பெண்களுக்கான தையல் பயிற்சி, இறகுப்பந்து விளையாட்டு மற்றும் பல்வேறு திறன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் மகளிர் சமூக நல அமைப்பின் தலைவர் பிரேமா, செயலாளர் மகேஸ்வரி, பொருளாளர் ராஜாத்தி, துணைத்தலைவர் அம்பிகா, துணைச் செயலாளர் தேன்மதி, விளையாட்டுத்துறைச் செயலாளர் ஷீலா, தையற்பள்ளி செயலாளர் கிருபா உள்பட பலா் கலந்து கொண்டனர்.

