
தூத்துக்குடி பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது
தூத்துக்குடி ஐ.சி.இ கிங் ஆப் கிங் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சோபுகாய் கோஜுரியோ கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் டாக்டர் சுரேஷ்குமார் தலைமையின் கீழ் தூத்துக்குடி மாவட்ட சோபுகாய் கோஜுரியோ கராத்தே பள்ளியின் தலைவர் சென்சாய் செந்தில் பயிற்சி அளித்தார்.
இந்த பட்டய தேர்வில் ஐ.சி.இ கிங் ஆப் கிங் பள்ளியின் தாளாளர் கிங்ஸ்டன் பால் மாணிக்கம் தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் செயலாளர் ராஜம்மாள் பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி சான்றிதழ்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா செய்திருந்தார்.
CATEGORIES மாவட்டம்

