
சிறந்த நாட்டுப்புற பாடகர், “கலைச்சுடர் மணி” பட்டத்தை தமிழன்டா ஜெகஜீவன்-க்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலை மன்றம் சார்பில் 2022 – 2023 ஆம் ஆண்டு 15 நபர்களுக்கும், 2023 – 2024 ஆம் ஆண்டு 15 நபர்களுக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 2022-23 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான சிறந்த நாட்டுப்புற பாடகர் மற்றும் சிறப்பு விருதுக்குரிய “கலைச்சுடர் மணி” என்ற பட்டத்தையும் பத்திரிகையாளரும், தமிழன்டா கலைக்குழு நிறுவனருமான ஜெகஜீவன் -க்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நாட்டுப்புறக் கலைஞர் சேர்மத்துரை, வீதி நாடக பயிற்சியாளர் செந்தில், பரதநாட்டிய கலைஞர் மாணிக்கம், நாட்டுப்புற கலைஞர் கருணாநிதி உட்பட 30 கலைஞர்களுக்கு விருதுகள், சால்வைகள் மற்றும் பணமுடிப்பு போன்றவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி உட்பட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

