
திமுக கொடுத்த வாக்குறுதியை 95 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். மாப்பிள்ளையூரணி விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ பேசினார்
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சவோியார்புரம் பகுதியில் புதிய ரேஷன்கடைகள் அமைத்து தரவேண்டும் என்று கிராமமக்கள் மற்றும் ஊராட்சி நிா்வாகம் சார்பில் கோாிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14லட்சம் மதிப்பீல் புதிதாக கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு ரேஷன் கடை திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி பேசுகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்கள் பணியை செய்து இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மகளிர் மேம்பாட்டிற்காக விடியல் பயணம் ஆயிரம் உதவித்தொகை பள்ளியில் காலை உணவு என பல்வேறு சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறார். தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சொல்லாத திட்டங்களும் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிலும் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் கார் கம்பெணி, வரவுள்ளது. கனிமொழி எம்.பியின் பணிகளும் இந்த மாவட்டத்தில் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் பல திட்டங்களையும் முறைப்படுத்தி மக்களுக்காக வழங்கி பணியாற்றி வருகிறார். எல்லா அரசு துறை அதிகாாிகளும் நல்லமுறையில் பணியாற்றி வருகின்றன. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணணும் மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்து கொடுத்து எங்களை போன்றவர்களை மட்டுமின்றி எந்த குறைகளாக இருந்தாலும் ஒன்றிய செயலாளர் மற்றும் நிா்வாகிகளிடம் தொிவித்தால் அதை முறையாக எங்களிடம் தொிவிப்பார்கள். அதை நாங்கள் தீர்த்து வைப்போம் வரும் காலங்களில் திமுக ஆட்சிக்கு எல்லோரும் துணை நிற்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
விழாவில் தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்க வாசகம், உதவி பொறியாளா் ரவி, கூட்டுறவுதுறை சரக பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், வருவாய் ஆய்வாளர் வேல்ராஜ், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஓன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் தர்மலிங்கம், சிவக்குமார், தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மோி, ஓன்றிய மகளிர் அணி அமைப்பாளா் ஜெஸிந்தா, ஓன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, கிளைச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, அம்புரோஸ், சந்திரசேகர், வேல்ராஜ், வடிவேல், மகாராஜா, மாாியப்பன், காசி, முன்னாள் ஓன்றிய துணைச்செயலாளர் மைக்கல்ராஜ், ஊர் தலைவர் ராயப்பன், மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் வில்சன், மகளிர் அணி சண்முகத்தாய், ரூபி, வளர்மதி, மற்றும் சேவியர், கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

