
பணம் கேட்டு கொடுக்காததால் தந்தையின் கழுத்து அறுத்துக் கொலை செய்த மகன் கைது – சாத்தான்குளத்தில் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்லையா (56). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் துரை கோவையில் வசித்து வருகிறார். இதனால் செல்லையா மட்டும் வீட்டில் தனியாக வந்துள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது வீட்டை விட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் அவர் தினமும் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவில் சாத்தான்குளத்தில் உள்ள கரையடி சுடலை மாடசாமி கோவில் வளாகத்தில் படுத்துறங்கி வந்துள்ளார். வழக்கம்போல் நேற்றிரவு கோவில் வளாகத்தில் செல்லையா படுத்துறங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை கழுத்தை அறுத்து அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செல்லையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, கோவையில் வசித்து வந்த செல்லையாவின் மகன் துரை தந்தையை பார்ப்பதற்காக ஊருக்கு வந்துள்ளார். ஊருக்கு வந்திருந்த துரை, தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், அதனால் செல்லையா மகனையும், தனது மனைவியையும் திட்டியதாகவும், இதனால் ஆத்திரமடைந்து கையில் இருந்த கத்தியால் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்றதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து துரையைக் கைது செய்தனர்.
பணம் கேட்டு கொடுக்காததால் தந்தையை மகன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்லையாவை கொலை செய்தது யார்? எதற்காக
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராம மங்கலத்தைச் சேர்ந்த வேதநாயகம் மகன் செல்லையா (60). இவர் நீண்ட காலமாக சாத்தான்குளம் வீரகுமார பிள்ளை தெருவில் வசித்து வந்தார்.
இவரது மனைவி சரோஜா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் துரை திருமணமாகி கோவையில் வசித்து வந்த நிலையில், தற்போது ஊருக்கு வந்துள்ளார்.
செல்லையா. உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று ஊர் திரும்பினார். வழக்கம்போல் கரையடி சுடலை மாடசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே படுத்து உறங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை செல்லையா கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடப்பதாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நாகராஜன், ஸ்டீபன் சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், ஊருக்கு வந்திருந்த செல்லையாவின் மகன் துரை, தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், அதனால் அவர் மகனையும் தனது மனைவியையும் திட்டியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து கையில் இருந்த கத்தியால் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்றதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து துரையை கைது செய்தனர்.

		