ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏஆர் ரஹ்மான் உண்ணாவிரதம்!
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன் வீட்டில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஆஸ்கர் தமிழன் ஏஆர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியுள்ள பீட்டா அமைப்பைத் தடை செய்யக கோரியும் வரலாறு காணாத போராட்டங்கள், தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் நடந்து வருகின்றன.
சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து போராடி வருகின்றனர்.
குறிப்பாக இந்தப் போராட்டத்தில் ஐடி துறை ஊழியர்கள் எழுச்சி பிரமிக்க வைப்பதாய் உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலுமே போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துள்ளனர். நான்காவது நாட்களாகத் தொடரும் இந்தப் போராட்டங்களைப் பார்த்து அனைத்து மாநில மக்களுமே தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். திரையுலகினரும் இந்தப் பிரச்சினைக்குக் குரல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஆஸ்கர் நாயகனான ஏ ஆர் ரஹ்மான் தனது ஆதரவை ஜல்லிக்கட்டுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், ‘ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் தமிழகத்தின் உணர்வுகளை ஆதரித்து நான் நாளை ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்,’ என்று தெரிவித்துள்ளார்.