
தூத்துக்குடி, ஆத்தூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவர் போக்சோவில் கைது
திருச்செந்தூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ்(55). இவர் டிரைவராக இருந்து வருகிறார். இவர் அப்பகுதியில் 3-ம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுமியின் வீட்டில் ஆளில்லாதபோது அங்கு சென்று தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து செல்போனில் ஆபாச படம் காண்பித்து சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவர் முத்துராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தி: திருச்செந்தூர் சதீஷ்

