
மாரடைப்பால் உயிரிழந்த ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் உடலுக்கு மாவட்ட எஸ்பி மலர்வளையம் வைத்து அஞ்சலி
ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் இன்று மாரடைப்பால் காலமானார் அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பாஸ்கரன் (53) அவர்கள், இன்று காலை (13.03.2024 ) தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் வைக்கப்பட்டிருந்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (13.03.2024 ) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர் மற்றும் போலீஸார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

