சாத்தான்குளம் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து- கண்டக்டர் உட்பட 3 பேர் காயம்

சாத்தான்குளம் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து- கண்டக்டர் உட்பட 3 பேர் காயம்

சாத்தான்குளம் அருகே அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலை ஓரத்தில் கவிழ்ந்தது 3 பேர் காயமடைந்தனர் வெங்கட்ராயபுரம், கொம்பன்குளம் சாத்தான்குளம் வழியாக ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு நேற்று அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பஸ் டிரைவர் திரவியம் ஓட்டியுள்ளார். கண்டக்டர் மாயாண்டி மற்றும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்ஸில் இருந்துள்ளனர்.

காலை 11 மணியளவில் வெங்கட்ராயபுரம் கொம்பன்குளம் இடையே செல்லும்போது வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கண்டக்டர் உட்பட 3 பேர் லேசான காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )