புதியம்புத்தூரில் சொத்துக்காக கூலிப்படை ஏவி இளம்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை – கணவரிடம் சகோதரி உட்பட 5 பேர் கைது

புதியம்புத்தூரில் சொத்துக்காக கூலிப்படை ஏவி இளம்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை – கணவரிடம் சகோதரி உட்பட 5 பேர் கைது

புதியம்புத்தூரில் இளம் பெண் மர்ம சாவில் திடீர் திருப்பமாக சொத்து பிரச்னையில் உறவினர்களே கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது. கணவரின் சகோதரி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட் டம் புதியம்புத்தூரில் வசித்து வந்தவர் காணியம்மாள் (30). இவரது கணவரான லாரி டிரைவர் ஜெயபால், கடத்தல் 5 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்ட நிலையில், காளியம்மாள் 1 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த பிப் 29-ம் தேதி மாலை காளியம்மாள் அவரது வீட்டில் பின் பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில் சொத்துக்காக உறவினர்களே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் ராமச்சந்திரன்(28) இவரது சகோதரி விஜயலட்சுமி (30), தனது தந்தையின் இரும்புக்கடை வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். ராமச்சந்திரன், புதியம்புத்தூரை சேர்ந்த காளியம்மாளை 2வது திருமணம் செய்துள்ளார். இதற்கு வட்சுமணன் வீட்டார் கடும் எதிர்ப்பு. இதனால் ராமச்சந்திரன் மட்டும் கோவையில் தனியாக வசித்தபடி. அவ்வப்போது புதியம்புத்தூரில் உள்ள காளியம்மாள் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், ராம்சந்திரன் சகோதரி விஜயலட்சுமி, தனது அத்தையான விளாத்திகுளம் ஓடைத்தெருவை சேர்ந்த கவிதா (44) என்பவரை தொடர்பு கொண்டு காளியம்மாள், ராமச்சத்திரனை 2வது திருமணம் செய்து கொண்டதால் தந்தையின் சொத்தில் பாதி காளியம்மாளுக்கு சென்று விடும் என்றும், அவரை கூலிப்படை தீர்த்துக்கட்டுமாறு கூறியுள்ளார். கவிதா தனது உறவினரான மாமு நயினார்புரம் விவேக் (24) என்பவர் மூலம் கீழ விளாத்திகுளத்தை சேர்ந்த ஜெயபாலன் (24) என்பவரை தொடர்பு கொண்டார்.

இவருடன் தனது கடை ஊழியர் புத்தூர் நடுவக்குறிச்சியை சேர்ந்த கலைச்செல்வன் (24) என்பவரை செல்போன் மூலம் பேசிய விஜயலட்சுமி, காளியம்மாளை தீர்த்து கட்டினால் ரூ.3 லட்சம் பணம் தருவதாக கூறியுள்ளார். முதற்கட்டமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அட்வான்சாக ரூ.50 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன் விஜயலட்சுமி, கவிதா வங்கி கணக்கு மூலம் ரூ.20 ஆயிரத்தை அனுப்பி ஜெயபாலனுக்கு கவிதா கொடுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த பிப். 29ம் தேதி பைக்கில் புதியம்புத்தூர் சென்ற ஜெயபாலன், காளியம்மாள் வீட்டிற்கு சென்று கால்நடை மருத்துவர் என அறிமுகப்படுத்திக்கொண்டு நாய்களுக்கு ஊசி போட வேண்டுமா? என கேட்டுள்ளார். அதற்கு காளியம்மாள் சரி எனக்கூறவே நாயை குறைக்காதபடி பிடித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, மருந்து எடுத்து வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். ஏற்கனவே தான் பைக்கில் மறைத்து வைத்திருந்த கயிற்றை மறைவாக எடுத்து வந்த ஜெயபாலன், காளியம்மாளின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார், விஜயலட்சுமி (55), கவிதா (44), ஜெயபாலன் (24), கலைச்செல்வன் (27), விவேக் (24) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )