கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் மற்றும் 1.5 லட்சம் பணம் கொள்ளை
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் மற்றும் 1.5 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை கரும்புக்கடை வள்ளலார் நகரை சேர்ந்த கேபிள் டிவி ஆப்ரேட்டர் சேட் என்பவர்,11-ஆம் தேதி காலை மனைவியுடன் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில்,12-ஆம் தேதி மாலை அருகில் வசிக்கும் சேட்டின் மகள்,வீட்டில் விளக்கு போடுவதற்காக வந்தபோது,வீட்டின் முன்பக்க கதவின் தாழ்பாள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிரிச்சி அடைந்து கணவருக்கும்,அருகிலிருந்தவர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்,வீட்டின் முதல் மாடியின் ஓர் அறையில் பீரோ உடைக்கப்பட்டு,அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள்,மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.மேலும் வீட்டில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை திருத்தம் செய்ததுடன்,அதனை திசைதிருப்பி கொள்ளையர்கள் வீட்டிற்குள் வந்ததை உறுதி செய்துள்ள காவல்துறையினர்,வீட்டில் பதிவான கைரேகைகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையில்,கொள்ளையடிக்கப்பட்ட அறைக்கு அருகே உள்ள டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்த நேற்று வசூலான ரூ.12 ஆயிரம் பணம் அப்படியே உள்ளதாகவும், வீட்டில் நிறைய அறைகள் இருந்தும் பணம்,நகை வைக்கப்பட்டுள்ள அறை சரியாக உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.இதனால் இந்த கொள்ளை சம்பவத்தில் யாரேனும் தெரிந்தவர்கள் ஈடுபட்டிருப்பார்களோ என்ற கோணத்திலும் குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.