அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மு.க.ஸ்டாலின் விரக்தியின் விளிம்புக்கு சென்றுவிட்டார் -முதலமைச்சர் பழனிசாமி
சேலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக தலைவர் ஸ்டாலின், நெடுஞ்சாலை ஒப்பந்தம் குறித்து அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார். கட்சிக்குள் பிரிவினையை உண்டாக்கும் ஸ்டாலினின் முயற்சி தோல்வி அடைந்து உள்ளது.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் சம்பள உயர்வை வழங்கி உள்ளோம். டெங்கு கொசு உற்பத்தியாகாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசின் நிலையை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டெண்டர்கள் குறித்த கேள்விகளுக்கு, ஸ்டாலின் எந்த பதிலும் சொல்லவில்லை?
திமுக கட்சி அல்ல கம்பெனி என்பதை ஒப்புக்கொண்ட ஸ்டாலினுக்கு நன்றி. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விரக்தியின் விளிம்பில் உள்ளார் ஸ்டாலின் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.