இந்திய துணை கண்டத்தில் அதிக திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு; முதல் அமைச்சர் பழனிசாமி
சேலத்தில் பூலாவரி என்ற இடத்தில் அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, இந்திய துணை கண்டத்திலேயே அதிக திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு. மாணவ மாணவிகள் பயன்பெற மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை அவர் கொண்டு வந்தார் என கூறினார்.
தொடர்ந்து அவர், தொண்டர்கள் இருக்கும் இயக்கமே வலிமையான இயக்கம். அ.தி.மு.க.வில் வாரிசு இல்லை. தொண்டர்களே வாரிசு. அ.தி.மு.க. இளைஞர்கள் இருக்கும் இயக்கம்.
இதுவரை 36 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது. ஒரு மடிக்கணினியின் விலை 16 ஆயிரம் ரூபாய். இன்னும் 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது என கூறினார்.