உத்தர பிரதேசத்தில் மகனை கொலை செய்த வழக்கில் மேல்சபை தலைவரின் மனைவி கைது
உத்தர பிரதேசத்தில் மேல்சபை தலைவராக இருப்பவர் ராஜேஷ் யாதவ். இவரது 2வது மனைவி மீரா யாதவ். இவர்களது இளைய மகன் அபிஜித் (வயது 22).
இந்த நிலையில் அபிஜித் உயிரிழந்து உள்ளார். இதனை மீரா மறைக்க முயன்றுள்ளார். ஆனால் 3 மருத்துவர்கள் கொண்ட குழு மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் அறிக்கையில், அபிஜித் தலையில் காயம் இருந்துள்ளது. அவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து மீராவை நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் விசாரணை குழு மீராவிடம் தொடர்ந்து இன்று விசாரணை நடத்தியது. இதில், அபிஜித் குடித்து விட்டு வந்து போதையில் தன்னிடம் முரட்டுத்தனமுடன் நடக்க முயன்றான். அதனால் இந்த சம்பவம் நடந்து விட்டது என மீரா தெரிவித்துள்ளார்.
எனினும், நேற்று மாலை பலத்த பாதுகாப்புடன் அபிஜித்தின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடந்தன. சொத்து தகராறினால் தனது 2வது மனைவியிடம் தொடர்பில் இல்லாமல் இருந்து வந்த மேல்சபை தலைவர் தனது மகனின் உடல் தகனத்தில் கலந்து கொண்டார்.