சென்னை மாதவரத்தைச் சேர்ந்த இரட்டை குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலி
சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இரட்டைக்குழந்தைகள் தீக்ஷா (7), தக்ஷனா (7) சிகிச்சை பலனின்றி உயிரழந்தனர். இவர்கள் இருவரும் மாதவரத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
மாதவரம் சந்தோஷ்நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் – கஜலட்சுமி தம்பதியின் 7 வயது இரட்டை குழந்தைகளான தக்சன், தீக்சா ஆகியோருக்கு கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக கடும் காய்ச்சல் இருந்துள்ளது. மருந்துகள் சாப்பிட்டும், காய்ச்சல் குறையாததை அடுத்து, 3 நாட்களுக்கு முன்பு, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது போல் சேலம் அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேருக்கு தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். நாகர்கோவிலில் பன்றிக் காய்ச்சலுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியை பலியானார்