
மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல்- போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட எஸ்பி ஆய்வு செய்தார்
வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் இன்று (20.03.2024 ) முதல் 27.03.2024 அன்று வரை நடைபெற உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் அதன் வளாக பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜசுந்தர், ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் புருஷோத்தமன், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் உள்ளிட்ட போலீஸார் உடனிருந்தனர்.
CATEGORIES மாவட்டம்