
சுவர்களில் போஸ்டர்கள், அரசியல் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் – அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
சுவர்களில் போஸ்டர்கள், அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு.
நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள் தொடர்ந்து இடம் பெற்றுள்ளதாக வரும் புகாரைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை மாலை 5 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு.
CATEGORIES அரசியல்