நிலங்களை மீண்டும் ஒப்படைக்க கோரி விவசாயிகள் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..
திருவள்ளூர் அருகே சிட்கோ நிறுவனத்தால் வேதியில் தொழில் பூங்கா அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தனியார் சட்டவிரோதமாக இறால் பண்ணைகளை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் நிலங்களை மீண்டும் ஒப்படைக்க கோரி விவசாயிகள் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..
திருவள்ளூர் மாவட்டம் காட்டுபள்ளி அருகே உள்ள ராமநாதபுரம் சின்ன கண்டல் பகுதியில் கடந்த ஆண்டு 1994 ஆம் ஆண்டு தமிழக அரசு
தமிழ்நாடு
வேதியியல் பூங்கா
டிட்கோ
நிறுவனம் (பெட்ரோ கெம் பார்க் )அமைப்பதற்காக
7158 ஏக்கர்
கையகபடுத்தப்பட்டது
அதில்
கையகப்படுத்திய 331 ஏக்கர் விவசாயநிலத்தை உபயோகப்படுத்தாமல் விட்டு விட்டதால் தற்போது அந்த நிலங்களை தனியார் ஆக்கிரமித்து உரிய அனுமதியி்ன்றி இறால் பண்ணைகளை அமைத்து வருவதால் மீண்டும் தங்களுக்கு விவசாய நிலங்களை வழங்க கோரி அப்பகுதி மக்கள் இறால் பண்ணைகளை முற்றுகையிட்டு கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து நிலமீட்பு போராட்டம் நடத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
தகவலறிந்து வந்த மீஞ்சூர் போலீசார் பொன்னேரி துனை வட்டாட்சியர் செல்வகுமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் மேற்கொண்டனர்
தங்களிடம் மீட்கப்பட்ட நிலத்தை
விவசாயிகளிடம் வழங்க வேண்டும் என்றும் கையகப்படுத்தப்பட்ட
26 ஏக்கர் நிலத்தில்
இழப்பீடும் தரவில்லை
என்றும் குற்றம் சாட்டினர்
தற்போது வரை அரசு வேதியியல் பூங்கா திட்டத்தை செயல்படுத்தாதால் உள்ளதால்
விவசாயிகளுக்கு மீண்டும் நிலத்தை வழங்கவேண்டும்
என்றும் கோரிக்கை வைத்தனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்…
பேட்டி
திரு விஜயன் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம்