உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல்

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தலா மூன்று பறக்கும் படை குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவில்பட்டி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூர் சந்திப்பு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஆனந்த லட்சுமி தலைமையிலான குழுவினர் நேற்று மாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது கோவில்பட்டியில் இருந்து கழுகுமலை நோக்கி சென்ற டாட்டா ஏசி மினி வாகனத்தை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஹாட் பாக்ஸ் அடங்கிய 250 அட்டைப்பெட்டிகளை மறைத்து வைத்து கொண்டு செல்வதை கண்டுபிடித்தனர். இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் 250 ஹாட் பாக்ஸை பறிமுதல் செய்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று தேர்தல் வட்டாட்சியர் வெள்ளத்துரை, வருவாய் வட்டாட்சியர் சரவண பெருமாள் ஆகியோரிடம்
ஒப்படைத்தனர். கைப்பற்ற பொருள்களின் மதிப்பு சுமார் 1 லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து வேன் ஓட்டுநர் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், வேனில் பயணித்த தென்காசி மாவட்டம் ஓடைக்கரைபட்டியை சேர்ந்த சக்திவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி செய்தியாளர்: முத்துக்குமார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )