
வனத்துறை சார்பாக தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உலக வன நாள் அனுசரிப்பு
வனத்துறை சார்பாக தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வனத்துறையினரால் மார்ச் 21 உலக வன நாள் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. இதில் வனச்சரகர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ராயப்பன் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்வில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆஸ்கார், மகேஷ் வனவர், லட்சுமணன் வன காவலர், சமூக ஆர்வலர் அசோக்குமார் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES மாவட்டம்