
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திற்குள் அத்துமீறிய மினி பேருந்து – கண்டித்ததால் காவலாளி மீது பஸ் ஏற்றிக் கொல்ல முயற்சி – அமைச்சரின் உறவினர் எங்களை ஒன்றும் செய்ய முடியாது – ஆணவத்தில் பஸ் டிரைவர்
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திற்குள் அத்துமீறிய மினி பேருந்தை கண்டித்ததால பேருந்து நிலையத்திற்குள் காவல் பணியில் இருந்த மாநகராட்சி காவலாளி மீது பேருந்து ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பழைய பேருந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு தற்போது எங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் வந்து செல்கின்றன இந்த பேருந்து நிலையத்திற்குள் தினமும் பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் பாதுகாப்பிற்காக முன்னாள் ராணுவ வீரர்களை காவலாளிகளாக மாநகராட்சி சார்பாக பணியமத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று வாக்காளர் வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தலைமையில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கே.பி.ஆர் என்ற மினி பேருந்து நிறுத்தப்பட்டது. இடையூறாக இருப்பதால் இதை அப்புறப்படுத்த வேண்டும் என அங்கு பணியில் இருந்த காவலாளி கூறியுள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுனர் அவரிடம் தகாத வார்த்தைகளை கூறி எங்கள் ஓனர் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமியின் உறவினர்கள். இந்த பேருந்தை கட்டுப்படுத்த யாருக்கும் அதிகாரம் கிடையாது எனக்கூறி ஆணவத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் ஒன்று சேர்ந்து ஓட்டுனரை கண்டித்து பேருந்தை அகற்றும்படி கூறியுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த பேருந்து ஓட்டுனர் காவலாளி மீது வேண்டுமென்றே மினி பேருந்தை கொண்டு மோதச் சென்றுள்ளார். இதைப்பார்த்து சுதாரித்துக் கொண்டு அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே காவலாளி சட்டென்று ஓடிச்சென்று அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அங்கிருந்த காவலர்கள் அங்கிருந்து மினி பேருந்தை அகற்றினர்.
அவர் மீது மினி பேருந்து ஓட்டுனர் காவலாளி மீது ஏறி கொலை செய்திருப்பார் என்று யாரும் கவனிக்கவில்லை என்று அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வு கலெக்டர் லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா மற்றும் அதிகாரிகள் இருக்கும்போதே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் போக்குவரத்து மற்றும் மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் பேருந்து நிலையத்திலிருந்து மினி பேருந்தை வெளியேற்றினர்.
மேலும், இந்த பேருந்துக்கு மாநகராட்சியிடம் இருந்து முறையாக அனுமதி பெறவில்லை எனவும், இதில் ஓட்டுநராக பணிபுரியும் நபர்களிடம் முறையான லைசென்ஸ் இல்லை எனவும் மேலும் போதையில் வாகனத்தை இயக்குவதாகவும் கூறப்படுகிறது.
எனவே முறையாக விசாரணை நடத்தப்பட்டு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் பொதுமக்கள் கண் முன்னே காவலாளியை மினி பேருந்து ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.