
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் முப்படை வீரர்கள் பணியமர்த்த உள்ளனர்- விருப்பம் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியர் தகவல்
2024-ம் வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு முப்படையை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பம் உள்ள 65 வயதிற்கு உட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் (JCO’s) மற்றும் இதர முன்னாள் படைவீரர்கள் (OR) தங்கள் விருப்பத்தினை முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம், தூத்துக்குடியில், தங்களது படைவிலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் அணுகி உரிய படிவத்தை பூர்த்தி செய்து தங்களது விருப்ப கடிதத்தினை சமர்ப்பித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.