
இந்தியா சுதந்திரத்திற்கு போராடியது போல் இப்போது பிஜேபியை அப்புறப்படுத்த போராடவேண்டும்- தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு
தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பிரச்சார பயணம் தொடக்கத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மா.கம்யூ மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இ.கம்யூ மாவட்ட செயலாளர் கரும்பன், வி.சி.க. மாவட்ட செயலாளர் கணேசன், இ.யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மக்கள் நீதிமய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர், மனிதநேய மக்கள் கட்சி தொகுதி பொறுப்பாளர் அகமது இக்பால், சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் கிதர்பிஸ்மி, ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் முருகேசன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் நம்பிராஜ் பாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் வரவேற்புரையாற்றினார்.
மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி கலைஞர் அரங்கம் முன்புள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்து வணங்கி திறந்த ஜீப்பில் தனது பிரச்சாரத்தை துவக்கி பேசுகையில் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு மறுபடியும் முதலமைச்சர் எனக்கு வாய்ப்பளித்துள்ளார். 5 ஆண்டுகாலம் உங்களோடு இருந்து பணியாற்றியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அது மீண்டும் கிடைக்க வேண்டும். என்பதற்காக நான் உள்பட தமிழகம் புதுச்சோியில் 40 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொகுதியில் நான் போட்டியிட வந்த போது பலர் என்னை பார்க்க முடியாது இந்த தொகுதிக்கு பணியாற்றுவாரா என்று எல்லோரும் எண்ணிய நேரத்தில் நான் 5 ஆண்டுகாலம் மக்கள் பணியாற்றியுள்ளேன். எனக்கு தூத்துக்குடி இன்னொரு தாய் வீடாகதான் பார்த்து பணியாற்றுகிறேன் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் சிலிண்டர் விலை 500க்கும், பெட்ரோல் விலை 75க்கும், டிசல் விலை 65க்கும், வழங்கப்படும். மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த திட்டமுமே நடைபெறவில்லை இனியும் பிஜேபி ஆட்சி நீடிக்கக்கூடாது. அதை அகற்ற வேண்டிய கால கட்டாயத்தில் எல்லோரும் இருக்கிறோம். ஆட்சியின் சாதனைகளை இல்லந்தோறும் எடுத்துச்சொல்ல வேண்டும் ஓன்றிய அரசின் வேதனைகளையும் சொல்ல வேண்டும் கேஸ் விலை உயா்ந்துவிட்டது பெட்ரோல் டிசல் விலை உயர்வு அதனால் விலைவாசி உயர்வு இதையெல்லாம் கருத்தில் கொண்டு திமுக தோ்தல் அறிக்கையில் கேஸ் விலை 500ம், பெட்ரோல் விலை 75ம் டிசல் விலை 65ம்க்கும் இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் வழங்குவோம். மகளிா்களுக்கு அதிக திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்விக்கு ஆயிரம், இலவச பேருந்து பயணம், மகளிர் உாிமைத்தொகை, தமிழகத்தில் ஓருகோடியே 16 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. நான் வாரத்தில் நான்கு நாட்கள் இங்கிருந்து பணியாற்றுவதாக கூறினார்கள். ஆனால் தமிழகத்தில் இப்போது பிரதமர் ஓரு மாதத்தில் நான்கு நாட்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறார். காரணம் தேர்தல் பயம் ஜுரம் வந்துவிட்டது. தமிழகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ள பாதிப்பின்போது எல்லா தரப்பினரும் ஓவ்வொரு வகையிலும் பாதிப்புக்குள்ளாகி உடமைகளை இழந்து ஓரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் உணவின்றி பாிதவித்த நேரத்தில் ஓரு முறை கூட தமிழகத்தில் வந்து பார்த்ததில்லை. பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு எந்த ஓரு உதவியும் செய்யவும் இல்லை. அரசு கோாிக்கை வைத்த நிதியும் வழங்கவில்லை. இந்த நிலையில் எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் உங்களை தமிழக மக்கள் புறக்கனிப்பார்கள். வௌ்ள பாதிப்பு கால கட்டத்தில் ஓன்றிய அரசின் அதிகாாிகள் அமைச்சர்கள் வந்து பார்வையிட்டு சென்றது தான் மிச்சம், ஆனால் பாதிக்கப்பட்ட ஓவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக முதலமைச்சர் 6ஆயிரம் உதவித்தொகை பயிர் இழப்பீட்டு உதவி வீடு இழந்தவர்களுக்கு உதவி என அனைத்து தரப்பினருக்கும் மாநில அரசு நிதியிலிருந்து உதவிகள் செய்யப்பட்டன. அதனால் பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சாியான பாடம் புகட்டும் வகையில் ஓரு விரல் வாக்குபதிவு புரட்சியின் மூலம் உங்களுக்கு புாிய வைப்பார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராட்டகாரர்களுடன் நின்று சட்ட போராட்டம் நடத்தினார் இப்போர் பிாிந்து இருக்கிறோம் என்று கூறி வாக்கு சேகாிக்க வரும் பிஜேபி அதிமுக இரண்டும் ஓன்று தான் அவர்களது ஏமாற்று வேலை ேதர்தல் முடிந்ததும் ஓரே ஸ்டிக்கர் தான் ஓட்டிக்கொள்வார்கள் திமுகவை அழிப்பேன் என்று கூறியவர்கள் தான் அழிந்ததாக வரலாறு ஓன்றியத்தில் உள்ள பிஜேபி அரசை அகற்றுவதற்கு இந்தியா சுதந்திரம் கிடைப்பதற்கு ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியது போல் இந்த தேர்தலில் நாம் வாக்களித்து அவர்களை விரட்டும் வரை போராட வேண்டும். எம்மதமும் சம்மதம் என்று மும்மதத்தையும் சமமாக மதித்து திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறோம். என்று பேசினார்.
அதனை தொடர்ந்து மாாியம்மன் கோவில் டிஎம்சி காலணி, அமொிக்கன் ஆஸ்பத்திாி ஜங்ஷன், கருப்பட்டி சொசைட்டி, பூபால்ராயர்புரம், திரேஸ்புரம், மட்டக்கடை, 2ம் கேட், சிவன்கோவில் தேரடி, பள்ளிவாசல், காந்திநகா் ஜங்ஷன், பாத்திமாநகர் ஜங்ஷன், பீங்கான் ஆபீஸ், சிதம்பரநகர், பிரையண்ட்நகர், பழைய பேருந்து நிலையம், அண்ணாநகர், உள்பட 24 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் மேயர் ஜெகன் பொியசாமி, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ஜுனர், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, கனகராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் ேகாட்டுராஜா, கஸ்தூாிதங்கம், இராஜா, தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளர் பெருமாள், மாவட்ட அணி அமைப்பாளா்கள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், குேபர்இளம்பாிதி, சீனிவாசன், கவிதாதேவி, அபிராமிநாதன், அசோக், ஜெயசிங், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பெனில்டஸ், அருணாதேவி, ராபின், சின்னத்துரை, பிரபு, அந்தோணி கண்ணன், ராமர், நாகராஜ், பார்வதி, நிக்கோலாஸ் மணி, ஜேசையா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ெஜயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர், ரூபஸ் அமிா்தராஜ், முருகஇசக்கி, ஜெயக்கனி, சாகுல் அமீது, பரமசிவம், டேனி, துணை அமைப்பாளர்கள் ரவி, ஆர்தர்மச்சாது, மகேஸ்வரன்சிங், பிக்அப் தனபால், சங்கரநாராயணன், பால்ராஜ், தங்கராஜ் சீதாராமன், முத்துராமன், குமரன், செல்வின், சீதாலட்சுமி, வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், தொமுச நிர்வாகிகள் மாியதாஸ், முருகன், கருப்பசாமி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், சேர்மபாண்டியன், சக்திவேல், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், சரவணக்குமார், இசக்கிராஜா, பொன்னப்பன், கண்ணன், ஜான்சிராணி, சுதா, ஜெயசீலி, சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, சரண்யா, தனலட்சுமி, முத்துமாாி, எடின்டா, கற்பகக்கனி, ரெக்ஸ்லின், எடின்டா, பவாணி, வைதேகி, மாியகீதா, ஜாக்குலின்ஜெயா, பேபி ஏஞ்சலின், அதிர்ஷ்டமணி, கந்தசாமி, சோமசுந்தரி, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபாியேல்ராஜ், மாலாதேவி, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, சுப்பையா, செல்வராஜ், முத்துராஜா, லியோஜான்சன், பொன்ராஜ், ரவீந்திரன், சுரேஷ், முனியசாமி, கங்காராஜேஷ், சதீஷ்குமார், ராஜாமணி, அண்டோ, பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட், செய்து காசிம், சத்யா, செல்வம், மற்றும் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து, சமத்துவ மக்கள் கழகம் தொகுதி பொறுப்பாளர் உதயசூாியன், மக்கள்நிதிமய்யம் மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஆதிதமிழர் பேரவை தொகுதி பொறுப்பாளர் சீதாலட்சுமி, ஆதிதமிழா்கட்சி தொகுதி பொறுப்பாளர் அன்பரசு, தமிழ் புலிகள் கட்சி பொறுப்பாளர் வேல்முருகன், மற்றும் மதிமுக நிா்வாகிகள் நக்கீரன், சரவணப்பெருமாள், பாலசுப்பிரமணியன், மகாராஜன், காங்கிரஸ் நிர்வாகிகள் அருள், கோபால், ராகுல், சேகர், வௌ்ளச்சாமி, நிர்மல்கிறிஸ்டோபர், விஜயராஜ், ஜெயராஜ், மைதீன், முத்துவிஜயா, சாந்தி, சிபிஎம் ராஜா, ரசல், சிபிஐ மாடசாமி, உள்பட இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பலர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.