தூத்துக்குடி சிவன் கோயிலில் 501 திருவிளக்கு பூஜைதூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத கார்த்திகை நட்சத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜை ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்றிரவு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி பாகம் பிரியாளுக்கு […]
திருச்செந்தூா் முருகன் கோவிலில் மே 22ம் தேதி வைகாசி விசாகம் திருவிழாதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகின்ற 22ம் தேதி நடைபெறுகிறது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக மே 13ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் தினமும் பகலில் சுவாமி ஜெயந்திநாதா் தங்கச் சப்பரத்தில் திருக்கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறாா். அங்கு மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னா், கிரிவீதி வலம் வந்து […]
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை தேரோட்டம்- அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள். தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிவன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் […]
திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஏப்.14-இல் சித்திரை மாத வசந்த திருவிழா தொடக்கம்திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏப்.14-இல் சித்திரை மாத வசந்த திருவிழா தொடக்க உள்ளது. இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த திருவிழா நடைபெறும். அதன்படி இந்தாண்டு விழா, ஏப்.14-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். மதியம் உச்சிகால […]
பிள்ளையார்நத்தம் கிராமத்தில் விவசாயம் வளம்பெற கலச விளக்கு வேள்வி பூஜை ஆன்மிக குரு பங்காரு அம்மா அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு பிள்ளையார்நத்தம் கிராமத்தில் விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் 84வது அவதார பெருமங்கல விழா நடைபெற்றது. ஓம்சக்தி கொடியை குருவிகுளம் சேர்மன் விஜயலெட்சுமி ஏற்றி வைத்தார். மழைவளம் வேண்டியும், தொழில்வளம் சிறக்கவும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் […]