
தூத்துக்குடி சிவன் கோயிலில் 501 திருவிளக்கு பூஜை
தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத கார்த்திகை நட்சத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜை ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்றிரவு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி பாகம் பிரியாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது கார்த்திகை மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 501 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
CATEGORIES ஆன்மீகம்