தூத்துக்குடி குருஸ் பர்னாந்து சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி குருஸ் பர்னாந்து சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த கோமான் ராவ்பகதூர் குருஸ் பர்னாந்து 94-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமாகிய கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் சேசையா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண் குமார், பகுதிச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மேகநாதன், ரவீந்திரன், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, ரெக்ஸ்லின், மாநகர தொழிலாளரணி அமைப்பாளர் முருகஇசக்கி, சுற்றுசூழல் அணி தலைவர் வினோத், வட்டச் செயலாளர்கள் பொன்ராஜ், டென்சிங், கதிரேசன், சதீஷ்குமார், சுரேஷ், சிங்கராஜ், மனோ, பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், வட்ட பிரதிநிதி புஷ்பராஜ், முன்னாள் கவுன்சிலர் ஜெய்சிங், பகுதி பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )