எச்ஐவி’ ரத்தம் தவறுதலாக ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தையின் எடை ஒரு கிலோ அதிகரிப்பு
எச்ஐவி ரத்தம் தவறுதலாக ஏற்றப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தையின் எடை தற்போது 1 கிலோ அதிகரித்துள்ளது. இந்த விவரம், நேற்று இந்த குழந்தைக்கு தாயிடம் இருந்து எச்ஐவி பாதிப்பு பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய ரத்த மாதிரி எடுத்தபோது தெரியவந்தது.
சாத்தூர் அரசு மருத்து வமனையில் கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி கர்ப்பிணி ஒருவருக்கு எச்ஐவி தொற்று இருந்த ரத்தம் ரத்த வங்கி ஊழியர்களின் கவனக் குறைவால் செலுத்தப்பட்டது. தமி ழகத்தில் பெரும் அதிர்வ லையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தனக்கு எச்ஐவி தொற்று இருப் பது தெரியாமல், கமுதியைச் சேர்ந்த இளைஞர் ரத்த தானம் செய்திருந்தார். அதனால், மன உளச்சல் அடைந்த அவர் தற்கொலை செய்தார்.
எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி, மதுரை அரசு மருத்துவமனையில் சீமாங் மருத்துவப் பிரிவில் அனும திக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி 17-ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை 1.75 கிலோ எடை இருந்தது. சராசரியாக, குழந் தைகள் பிறக்கும்போது எடை 2 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால், இந்தக் குழந்தையின் எடை குறைவாக இருந்ததால், எச்ஐவி தொற்று இல்லாமல் பிறந்துள்ளதா? என மருத்துவர்கள் குழப்பம் அடைந் தனர். அதனால், அந்த குழந்தை யையும், தாயையும் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தனர்.
தற்போது அந்த குழந்தையின் எடை 2.8 கிலோவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த குழந் தைக்கு எச்ஐவி இருக்கிறதா? என்பதைக் கண்டறிய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, ரத்தப் பரிசோதனை செய்வதற்காக நேற்று வேறு மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து ‘டீன்’ வனிதா கூறியதாவது: குழந்தை ஆரோக் கியத்துடன் உள்ளது. குழந்தைக்கு எச்ஐவி தோற்று உள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளை வெளியிட முடியாது.
எந்த மாவட்டத்தில் ரத்தப் பரிசோதனை நடந்தது என்பதும் வெளியே தெரியாது. குழந்தைக்கு அடுத்த 30 நாட்களுக்கு பிறகு, மீண்டும் ரத்த மாதிரிப் பரிசோதனை நடத்தப்படும். அடுத்ததாக 6 மாதம், 12 மாதம், 18 மாதத்தில் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்படும். மேலும், தாய்க்கு எச்ஐவி தொற்று எந்தளவுக்கு உள்ளது என்பதும் பரிசோதனை செய்யப்படும். நோயின் வீரியம் குறித்தும் வெளிப் படையாகக் கூற முடியாது. தாயும், குழந்தையும் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பிலேயே வைக்கப் பட்டிருப்பர்’’ என்றார்.