உலக பொருளாதார வல்லரசு நாடுகள்: 2050-ல் சீனா முதலிடம்; இந்தியா 2-ம் இடம் – பிரிட்டிஷ் ஆய்வு நிறுவனம் கணிப்பு
உலக பொருளாதார வல்லரசு நாடுகள் பட்டியலில் வரும் 2050-ம் ஆண்டில் சீனா முதலிடத்தையும் இந்தியா 2-ம் இடத்தையும் பிடிக்கும் என்று பிரிட்டிஷ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பி.டபிள்யூ.சி. என்ற ஆய்வு நிறுவனம் வரும் 2050-ம் ஆண்டில் உலகம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சீனாவும் இந்தியாவும் விரைவில் முந்தி விடும். வரும் 2030-ம் ஆண்டி லேயே உலகின் மிகப்பெரிய பொரு ளாதார வல்லரசு நாடாக சீனா உருவெடுத்துவிடும். அமெரிக்கா 2-ம் இடத்திலும் இந்தியா 3-ம் இடத்திலும் இருக்கும். ஜப்பான், இந்தோனேசியா, ரஷ்யா, ஜெர்மனி, பிரேசில், மெக்ஸிகோ, பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும்.
அதன்பிறகு வரும் 2050-ம் ஆண்டு நிலவரப்படி உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடு என்ற அந்தஸ்தை சீனா தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும். அப்போது அமெரிக் காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா 2-ம் இடத்துக்கு முன்னேறிவிடும். அமெரிக்கா 3-ம் இடத்தில் இருக்கும்.
இந்தோனேசியா, பிரேசில், ரஷ்யா, மெக்ஸிகோ, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், துருக்கி, பிரான்ஸ், சவுதி அரேபியா, நைஜிரியா, எகிப்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும். பாகிஸ்தான் 16-வது இடத்தில் இருக்கும்.
இவ்வாறு அந்த ஆய்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தி இந்து தமிழ்