மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், அரசு நலத் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, மதுரை, கன்னியாகுமரி, சென்னை வந்து சென்றார். மார்ச், 6ம் தேதி, சென்னையிலும் நேற்று முன்தினம், கோவையிலும் பிரசாரம் செய்தார். அதன் தொடர்ச்சியாக, 13ம் தேதி, மீண்டும், தமிழகம் வருகிறார்.அன்று மாலை, ராமநாதபுரத்தில், பா.ஜ., வேட்பாளரை ஆதரித்தும், தேனியில், அ.தி.மு.க., வேட்பாளரும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்தை ஆதரித்தும், பிரசாரம் செய்ய உள்ளார். இக்கூட்டத்தில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.