
புதுக்கோட்டை அருகே நடந்த பழிக்கு பழி கொலை வழக்கு- 8 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – கலெக்டர் மற்றும் எஸ்பி நடவடிக்கை
கடந்த 28.02.2024 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகைக்குளம் பகுதியில் தூத்துக்குடி to திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்க் அருகே தூத்துக்குடி பக்கப்பட்டி பகுதியை சேர்ந்த பிரமுத்து மகன் வடிவேல் முருகன் (28) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து செந்திமங்கலம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் இசக்கிமுத்து (32), தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பக்கப்பட்டியை சேர்ந்தவர்களான சுப்பையா என்பவரது மனைவி லெட்சுமி (55), சுப்பையாவின் மகன்களான சின்னதம்பி (25), மாரிமுத்து (28), புதியம்புத்தூர் மேல வேலாயுதபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் பிரவீன்குமார் (21), திருநெல்வேலி மாவட்டம் சொக்கட்டன்தோப்பு பகுதியை சேர்ந்த குமார் மகன் ஆறுமுகம் (எ) அலெக்ஸ் (23), திருநெல்வேலி மாவட்டம் திருமலை கொழுந்துபுரம் பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் பிரவீன் (26) மற்றும் தூத்துக்குடி தாளமுத்துநகர் மேல அழகாபுரி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் விஜய் (29) ஆகியோரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் இசக்கிமுத்து, சின்னதம்பி, மாரிமுத்து, பிரவீன்குமார், ஆறுமுகம் (எ) அலெக்ஸ், பிரவீன், விஜய் மற்றும் லெட்சுமி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அப்போதைய புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராமேஸ்வரி அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து செந்திமங்கலம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் 1) இசக்கிமுத்து, தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பக்கப்பட்டியை சேர்ந்தவர்களான சுப்பையா என்பவரது மனைவி 2) லெட்சுமி, அவரது மகன்களான 3) சின்னதம்பி, 4) மாரிமுத்து, புதியம்புத்தூர் மேல வேலாயுதப்புரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் 5) பிரவீன்குமார், திருநெல்வேலி மாவட்டம் சொக்கட்டன்தோப்பு பகுதியை சேர்ந்த குமார் மகன் 6) ஆறுமுகம் (எ) அலெக்ஸ், திருமலைகொழுந்துபுரம் பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் 7) பிரவீன் மற்றும் தூத்துக்குடி தாளமுத்துநகர் மேல அழகாபுரி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் 8) விஜய் ஆகிய 8 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தற்போதைய புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் இசக்கிமுத்து, சின்னதம்பி, மாரிமுத்து ஆகியோரை கடலூர் மத்திய சிறையிலும், பிரவின்குமார், ஆறுமுகம் (எ) அலெக்ஸ், பிரவீன், விஜய் ஆகியோரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் லெட்சுமியை மதுரை பெண்கள் தனிச்சிறையிலும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து அடைத்தார்.