தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறை வெடிகுண்டு நிபுணத்துவ குழுவினர் தீவிர சோதனை

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறை வெடிகுண்டு நிபுணத்துவ குழுவினர் தீவிர சோதனை

வரும் 19.04.2024 அன்று நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ள காவல்துறை வெடிகுண்டு நிபுணத்துவ குழுவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்படி உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறை வெடிகுண்டு நிபுணத்துவ குழுவினர் இன்று (06.04.2024) பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், கடற்கரை பகுதிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் உள்ள சந்தேகப்படும்படியான பார்சல்கள், மூட்டைகள், பைகள் ஆகியவற்றை சோதனை செய்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காவல்துறை வெடிகுண்டு நிபுணத்துவ குழுவினர் தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுபாப்பு நடவடிக்கையாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )