இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்: அஜித் வடேகர் கருத்து
இந்தியா – ஆஸ்திரேலியா அணி களுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் வடேகர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மிகச்சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அந்த அணி வெற்றி பெறுவது அத்தனை சுலபமான விஷயமல்ல. இந்த தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் மிகுந்ததாக இருக்கும்.
இந்திய அணியில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களான கோலி, சேதேஷ்வர் புஜாரா போன்ற வர்கள் உள்ளனர். பந்துவீச்சிலும் ஆஸ்திரேலியாவுக்கு சவால் விடும் வகையிலான வீரர்கள் உள்ளனர். இங்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நன்றாக தெரியும். அதே நேரத்தில் ஆஸ்தி ரேலிய அணி வேகப்பந்து வீச்சையே பெரிதும் நம்பியுள் ளது. ஆனால் இந்திய ஆடுகளங் கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதக மானவை. இது ஆஸ்திரேலிய அணிக்கு பாதகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தி இந்து தமிழ்