காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 2500 கிலோ பீடி இலைகள் மற்றும் படகு பறிமுதல் – ஒருவர் கைது

காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 2500 கிலோ பீடி இலைகள் மற்றும் படகு பறிமுதல் – ஒருவர் கைது

காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடைபெறுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கியூபிரிவு போலீசார், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உட்கோட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காயல்பட்டினம் கடற்கரையில் கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜயஅனிதா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா தலைமை காவலர் ராமர், மணிகண்டன், இருதயராஜ், காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் இன்று 22.04.24 அதிகாலை 03. , சந்தேகிக்கும் படி நின்று கொண்டிருந்த படைகில் சோதனை செய்த போது, ​​இலங்கைக்கு கடத்துவதற்காக சுமார் 30 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகளில் இருந்த பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுத்தொடர்பாக தூத்துக்குடி திரேஸ்புரம், சிலுவையார் கோவில் பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் அந்தோணித்துரை (52) என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர் படகு (சுசுகி 40 ஹெச்பி டபுள் இன்ஜின்) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பீடி மூட்டைகளின் எடை சுமார் 2.500 கிலோ ஆகும். இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் என கூறப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )