உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது
சமாஜ்வாடி கட்சி ஆட்சி செய்யும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என சமாஜ்வாடி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து உள்ளது. தனியாக போட்டியிடும் பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை சட்டப்பேரவை தேர்தலிலும் பெற்று ஆட்சி அமைக்கவேண்டும் என தீவிரமாக உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியில் தீவிரமாக உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 67 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு உள்ளதால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பலத்த பாதுகாப்புடன் 67 தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தல் நடைபெறும் 67 தொகுதிகளில் 34 தொகுதி சமாஜ்வாடி கட்சி வசம் உள்ளது.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மொத்தம் 70 தொகுதிகளில் 69 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரு மாநிலங்களிலும் தலா ஒரு தொகுதியில் இன்று நடைபெற இருந்த வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. வேட்பாளர்கள் உயிரிழப்பு காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
நன்றி : தினத்தந்தி