சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை- திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை- திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

22.04.2024 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த தண்டல்காரன்பட்டியைச் சேர்ந்த சுகுமார் (35) என்பவரை போக்சோ வழக்கில் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப். அறிவுறுத்தலின்படி வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்.வசந்தா, நீதிமன்ற தலைமைக் காவலர் ஆரோக்கிய செல்வி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி சீரிய முயற்சியால் இன்று  22.04.2024-ம் தேதி திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளி சுகுமார்  என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )